மிஹிசரு விருதுகள் மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகாரசபையால் (WMA-WP) மாகாணத்தில் உள்ள கழிவுகளை சிறந்த முறையில் முகாமைத்துவப்படுத்தும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் செயலூக்கமான பங்கேற்பு மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டுவதற்காக நடத்தப்படுகிறது. மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகாரசபையின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட கழிவு பொருட்கள் முகாமைத்துவ திட்டங்களின் தொகுப்பிலிருந்து விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.சிறந்த நடுவர்கள் குழு குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்பட்ட ஒரு உன்னிப்பான ஆய்வுக்குப் பிறகு சிறந்த பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
சிறந்த நடுவர்கள் குழு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. விருதுகளில் பாராட்டுச் சான்றிதழ்கள், திறமை விருதுகள், வெண்கல, வெள்ளி மற்றும் தங்க விருதுகள் மற்றும் சிறந்தவற்றில் சிறந்தவர்களுக்கா பிளாட்டினம் விருது ஆகியவை அடங்கும். மேலதிகமாக, சிறப்பு பாராட்டுக்கான விருது மற்றும் ஒரு அரிய வாழ்நாள் விருதும் உள்ளது.