எங்களைப்பற்றி

கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபைக்கு உங்களை வரவேற்கிறோம்

திண்மக் கழிவுகளை அகற்றுவது இலங்கையின் முக்கிய சுற்றாடல் பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது. சாலை ஓரங்களிலும், ஈரநிலங்கள், சதுப்பு நிலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உணர்திறன் நிறைந்த பகுதிகளில் குப்பைகளை கொட்டுவது பொதுமக்கள் மற்றும் சில உள்ளூராட்சி அதிகார சபைகளால் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறையாகிவிட்டது. கழிவுகளை அகற்றுவது தொடர்பாக மக்களிடையே காணப்படும் எண்ணம் அதே போல் கழிவு பொருட்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரிய முறைகளை பயன்படுத்த தொடர்புடைய உள்ளுராட்சி தாபனங்களிடம் காணப்படும் இயலாமையினால் நிறுவனங்கள் முகம் கொடுக்கும் சிரமங்களே இதற்கு காரணம் ஆகும்.

மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை, இலங்கையின் அதிக மக்கள் தொகை கொண்ட பிராந்தியத்திற்கான கழிவு பொருட்கள் முகாமைத்துவ அமைப்புகளில் கவனம் செலுத்துவதற்காக நிறுவப்பட்ட அரசாங்க அமைப்பாகும். மேல் மாகாணத்தில் நாளொன்றுக்கு 3,500 மெற்றிக் தொன் கழிவுகளை உற்பத்தி ஆகின்றன, இது நாட்டின் மொத்த கழிவுகளில் 60 சதவீதமாகும். மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது கழிவு மீள்சுழற்சி செய்பவர்களை பதிவு செய்தல்,, 21 உணவுக் கழிவு உரமாக்கும் வசதிகள் வழங்கும் இடங்களை கண்காணித்தல், மற்றும் கழிவு உற்பத்தியை குறைத்தல், வீட்டு பசளை உற்பத்தி செய்தல், உயிர்வாயு உற்பத்தி செய்தல் மற்றும் கழிவுகளை மீள்சுழற்சி செய்வதற்கு பயிற்சி, தொழில்நுட்ப வழிகாட்டுதகல் மற்றும் திட்டங்களை நடைமுறைபடுத்துகின்றது. இந்த பசளை மிஹிசரு என்ற வர்த்தக நாமத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

எங்களைப்பற்றி

மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை (WMA-WP) 1999 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ நியதிசட்டத்தின் கீழ் 2005 ல் ஸ்தாபிக்கபட்டது. 2007 இல் இச்சட்டம் வலுப்படுத்தபட்டதுடன், தற்போது, மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ் செயல்படுகிறது.

அதன் ஆரம்ப காலத்தில் இருந்து பெறப்பட்ட அனுபவத்துடன் மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது கழிவு முகாமைத்துவ துறையில் ஒரு பெரிய வசதி அளிக்கும் நிறுவனமாக பங்களிப்பை வழங்கி உள்ளது. மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது கழிவுகளை பதபடுத்துவதற்காக "மிஹிசரு" வள முகாமைத்துவ மையங்களை நிறுவியதன் மூலம் அதன் எல்லையை விரிவுபடுத்தி உள்ளது. தெரிவு செய்யப்பட்ட துறைகளில் அறிவு, அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட திறமையான பணியாளர்களை இந்த அதிகார சபை கொண்டுள்ளது. எனவே எங்கள் சேவைகளை பல்வகைபடுத்துவதன் மூலம் கழிவு முகாமைத்துவ துறையில் ஆலோசனை சேவைகள் வழங்குதல், கழிவுகளை அகற்றுவதற்கான சுற்றுசூழல் சேவைகளை வழங்குதல், கள ஆய்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பயிற்சி வழங்குதல், தேசிய தொழில்முறை தகைமைகளை உறுதி செய்தல் போன்ற நடவடிக்கை வரை மேலும் சேவைகளை விரிவுபடுத்தினோம் இதை விட பசளை பகுப்பாய்வுக்காக ஆய்வு சோதனை சேவைகளை வழங்குதல், கழிவு பண்பு மற்றும் நீர் தர சோதனைகள் வரை எங்களது சேவைகள் விரிவு அடைந்துள்ளன. பல ஆண்டுகளாக நாங்கள் நம்பகமான மற்றும் வலுவான நிறுவனமாக பரிணமித்துள்ளோம்.

நோக்கு

“மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவத்தின் அடையாளமாக” மாறுதல்

பணிக்கூற்று

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் மேல் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கழிவு பொருள் முகாமைத்துவ உத்திகளின் அடிப்படையில் அரச மற்றும் தனியார் துறைகளுக்கு கழிவு பொருட்கள் முகாமைத்துவத்தில் புதுமையான மற்றும் பிரத்தியேகமான தீர்வுகளை வழங்குதல். கழிவு முகாமைத்துவ துறையை தொடருந்து அபிவிருத்தி செய்யும் அதேவேளையில் நெகிழ்வு தன்மை மற்றும் நிபுணத்துவத்தை அதிகரித்தல், நிலைத்தன்மை அடைவதற்காக பரந்த அளவிலான வாடிக்கையாளர்களுக்கு பயற்சி,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை வழங்குதல்.

மதிப்புகள்

அதிகார சபையின் முக்கிய மதிப்புகளான நேர்மையான பொறுப்பு கூறல், பாதுகாப்பு, நிபுணத்துவம், மரியாதை, உள்ளடக்கம், பன்முகத்தன்மை மற்றும் பணியாளர் ஊக்கப்படுத்தல் வரை இது செல்வதுடன் அதிகார சபையின் செயல்பாடுகளின் அனைத்து பிரிவுகளிலும் நியாயமான, நேர்மையான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் தேவையை வழியுறுத்துவதுடன் தொழில்முறை வழிகாட்டுதலும் வழங்குகிறது.

தலைவரின் செய்தி

மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர், திரு. மெரில் பெரேரா

மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கு "கழிவுகளற்ற சூழலை" வழங்கும் நோக்கில் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையானது 2007 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கழிவு பொருட்கள் முகாமைத்துவ நியதிச்சட்டத்தின் கீழ் இயங்குவதுடன் மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை மேல் மாகாணத்தில் அமைந்து உள்ள 49 உள்ளூராட்சி தாபனங்களுடன் இணைந்து செயற்படுகின்றது.

மாகாண சபையின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக, "கழிவு ஒரு பிரச்சனை" என்ற பாரம்பரிய கண்ணோட்டத்தில் இருந்து விலகி, "கழிவு ஒரு வளம்" என்ற மனப்பான்மையுடன், கழிவுகளிலிருந்து தொடர்ச்சியாக வருமானத்தை ஈட்டுவதற்கான உத்திகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன், அது நிலையான அபிவிருத்தியின் ஊடாக முன்னேறி அபிவிருத்தியடைந்த பொருளாதாரத்தை நோக்கிய அரசாங்கத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்கு காரணமாக அமையும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொடர்ச்சியாக மாறிவரும் நுகர்வு முறைகளிலிருந்து தோன்றும் கழிவு பொருட்கள் முகாமைத்துவைத்தின் சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுப்பதற்காக தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதில் நாங்கள் திறமையாக பணியாற்றியுள்ளோம். தேசிய மற்றும் சர்வதேச நியமங்களைப் பின்பற்றி நவீன தொழில்நுட்பம் மற்றும் விரைவான கழிவு சுத்திகரிப்பு முறைகளை அறிமுகப்படுத்தி மேல் மாகாணத்தில் வாழும் மக்களுக்கு தரமான கழிவு பொருட்கள் முகாமைத்துவ சேவையை தொடர்ச்சியாக வழங்குவதே எமது அடிப்படை நோக்கமாகும்.

பணிப்பாளரின் செய்தி

மேல் மாகாண கழிவு பொருள் முகாமைத்துவ அதிகாரசபையின் பணிப்பாளர், திரு .நளின் மான்னப்பெரும

நாடளாவிய ரீதியில் 60% க்கும் அதிகமான நகர்ப்புற கழிவுகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்ய பெரும் பங்களிப்பை வழங்கும் மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் இச் செய்தியை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்

மேல் மாகாணத்தில் தொடர்ந்து வளர்ந்து வரும் நுகர்வோர் பொருளாதாரத்தில் உருவாகும் கழிவுகளை நிர்வகித்தல் என்பது முடிவற்ற சவாலாக உள்ளது.

சுழலும் பொருளாதாரத்தில், கழிவு முகாமைத்துவத்தில் தற்போதைய உலகளாவிய போக்குகளைப் பின்பற்றி, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையானது "கழிவை உண்மையான வளமாக்குவோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படுவதற்கு மிகவும் நிலையான கழிவு முகாமைத்துவ அணுகுமுறையை நோக்கி நகர்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக, மேல் மாகாணத்தை மிகவும் பயனுள்ள தூய்மையான இடமாக மாற்றுவதில் அதிகாரசபை பாரிய பங்கு ஆற்றி உள்ளது. அறிவு, திறன் மற்றும் அனுபவம் நிறைந்த பணியாளர்களைக் கொண்டு எங்களால் எங்கள் நிறுவனத்தை மேம்படுத்த முடிந்துள்ளதுடன் கிடைக்கப்பெற்ற பௌதீக வளங்கள் மூலம் சமூகத்திற்கு வினைத்திறன் மற்றும் உற்பத்திறன்மிக்க சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம்.

இந்த இலக்குகள் அனைத்தையும் நாம் எங்கள் திறமையான ஊழியர்களின் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக அடைய முடியும். எதிர்காலத்தில் கழிவு பொருட்கள் முகாமைத்துவத் துறையில் சேவையாற்றும் திறனை அதிகரிப்பதன் மூலம் அதிகாரசபை தனது பலத்தை அதிகரிக்க எதிர்பாக்கின்றது. எனவே, தேசிய மற்றும் சர்வதேச தரங்களின் தேவைகளுக்கு ஏற்ப, உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் கழிவு பொருட்கள் முகாமைத்துவத் தேவைகளுக்கு புதுமையான, உயர் தொழில்நுட்ப, இலாபகரமான மற்றும் நிலையான தீர்வுகளை நாங்கள் வழங்குவோம்.

நிறுவன வரலாறு

திண்மக் கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுவது மற்றும் அது தொடர்பான பாரிய பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில், அதற்கான பயனுள்ள பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மேல் மாகாண சபை ஆராய்ந்தது பார்த்தது. அதன்படி 1999 ஆம் ஆண்டு மேல் மாகாண முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் கழிவு முகாமைத்துவத்திற்காக அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க முடிந்தது.

1999 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகாரசபையின் நியதிச்சட்டம் 1999 ஆம் ஆண்டு மேல் மாகாண சபையால் நிறைவேற்றப்பட்டதுடன், அதன் பிரகாரம் மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது 2004 ஆம் ஆண்டு ஒழுங்கான முறையில் நிறுவப்பட்டது. அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் பின்னர் நிறுவப்பட்ட ஆரம்பகால அதிகார சபையாக இருந்த இந்த அதிகார சபை, அதன் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகள் மாகாண சபைக்கு கையளிக்கப்பட்டது. மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது இன்னும் மாகாண மட்டத்தில் கழிவு பொருட்கள் முகாமைத்துவத்திற்கான ஒரே விசேட அதிகார சபையாக உள்ளது.

இலங்கையில் மாகாண கழிவு முகாமைத்துவச் செயற்பாட்டின் முதலாவது புதுமையான நடவடிக்கையாக இது அமைந்ததால், அதன் நிர்வாகக் கட்டமைப்பை ஒழுங்கமைக்கவும், பணியாளர்களை அங்கீகரிப்பதற்கும், வினைத்திறனாக செயற்படுத்துவதற்கு அத்தியாவசியமான ஊழியர்களை பணியமர்த்துவதற்கும் சிறிது காலம் எடுத்தது.

கழிவுகள் பிரச்சினையாகி இருந்ததினால் ஆரம்பத்தில் மாகாணத்தின் உள்ளுராட்சி மன்றங்கள், அரசியல் தலைமைகள், சுகாதாரம் மற்றும் சுற்றாடலுக்குப் பொறுப்பான அரச நிறுவனங்கள், சிவில் சமூகம், பொதுமக்கள் எனப் பல்வேறு துறைகளில் இருந்து இந்த தாபனத்தின் சேவைகளை பெற்று கொள்வதற்காக பாரிய கேள்வி எழுந்தது. இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 2004 இல் நன்கொடையாளர் நிறுவனங்களிடமிருந்து தொழில்நுட்ப உதவி கோரப்பட்டதுடன் மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் திறனை ஒழுங்குபடுத்தவும் கட்டியெழுப்பவும் ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனமான (USAID)/ ஐக்கிய அமெரிக்கா - ஆசியாவின் சுற்றாடல் கூட்டு செயட்பாடும் (USAEP ) முன் வந்து, இலங்கை அரசாங்கத்துடனும் மேல் மாகாண சபையுடனும் இணைந்து ஒரு கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது. 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் USAID/USAEP தொழில்நுட்ப மற்றும் நிதி உதவித் திட்டத்துடன், மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை அதன் சேவைகளை சிறப்பாகக் கருத்தில் கொள்வதற்கு நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் சட்டப் பயன்பாட்டிற்கு ஏற்ற முறையில் புதுமையான உத்திகளைக் கண்டறிந்தது.

இந்த USAID/USAEP நிகழ்ச்சி திட்டத்தின் கீழ்,மேல் மாகாண சபை 2007 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை நியதிச்சட்டத்தின் சட்ட பூர்வமான தன்மையை மேலும் வலுப்படுத்தியதுடன் கழிவு பொருட்கள் முகாமைத்துவம் தொடர்பான ஆலோசனை சபை ஒன்றினை அமைத்தல், தண்டனை முறை ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் துணை விதிகளை தயாரிப்பதற்காக உள்ளூராட்சி தானங்களை பலப்படுத்துதல் போன்ற புதுமையான அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் குறிக்கோள்கள்

கழிவு பொருட்கள் முகாமைத்துவ நியதிச்சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கபடும் குறிக்கோள்கள்:

  1. 2009 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நியதிச்சட்டத்தால் திருத்தப்பட்ட 2007 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நியதிச்சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல்.
  2. சுற்றுச்சூழலில் கழிவுகள் தேங்குவதைத் தடுப்பதுடன், மாகாணத்தில் வாழும் பொது மக்கள் அதேபோல் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் நல்வாழ்வுக்காக தூய்மையான சூழலைப் பேணுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.
  3. கழிவு பொருட்களை அகற்றும் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக திட்டமிடுதல், ஆலோசனை வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்தல்.
  4. மேல் மாகாணத்தில் உருவாகும் கழிவுகளை சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் கேடு விளைவிக்காத வகையில் எடுத்துச் சென்று சேமித்து வைப்பதுடன், அதனால் ஏற்படக்கூடிய அபாயகரமான சூழ்நிலைகளை கண்டறிந்து மதிப்பீடு செய்து, அவற்றைத் தடுப்பதற்குத் தேவையான நடைமுறைகளைப் பின்பற்றுதல்.
  5. கழிவுகளை மீள்சுழற்சி செய்தல் மற்றும் மீள்பயன்பாடு பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல்.
  6. கண்மூடித்தனமான கழிவுகளை அகற்றுவதால் மாசுபட்ட இடங்கள் மற்றும் பகுதிகளை அந்த நிலையில் இருந்து மீட்டு எடுக்கும் நோக்கில் அறிவுறுத்தல்களை வழங்குதல் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்..
  7. உள்ளூர் அல்லது வெளிநாட்டு உதவியுடன் மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான அனைத்து திட்டங்களையும் உள்ளுராட்சி தாபனம் அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் அல்லது நபர்களுடன் ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்தல்..
  8. ஆவணங்கள், அறிக்கைகள், புத்தகங்கள், தகவல் மற்றும் அறிவிப்புகளை மாகாணத்தின் பிற நிறுவனங்களுடன் இணைந்து வெளியிடுதல் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துதல்.
  9. அதிகாரசபையின் நோக்கங்கள் மற்றும் சமமான நோக்கங்களை கொண்ட ஏனைய உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுதல்.
  10. கழிவுகள் பரவுவதைத் தடுப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் கண்டறிய, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் அவை தொடர்பாக சில நடவடிக்கைகளை பரிந்துரைப்பதுற்கு ஆராய்ச்சியை மேற்கொள்வது.

நிறுவன அமைப்பு

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்ட 25 பதவிகளை கொண்ட பணியாளர்களுடன் 2005 இல் கழிவு முகாமைத்துவ அதிகாரசபை நிறுவப்பட்டது. பின்னர், அதிகாரசபையின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் ஊழியர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரிக்கப்பட்டது.

மிஹிசரு வள முகாமைத்துவ நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் பணியாளர்களை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது. எனவே மிஹிசரு நிலையங்களுக்குத் தேவையான பணியாளர்கள் கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் முகாமைத்துவ சபையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டனர். தற்போது, கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் மொத்த மனித வள திறன் 110 ஆக உள்ளது. மிஹிசரு வள முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதுடன், தற்போது 70 பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர். கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணியாளர்களுக்கு (பயிற்சியாளர்கள் / உள்வாரிப் பயிற்சியாளர்கள்) அவர்களின் கோரிக்கையின் பேரில் பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குகிறது.

படம் 3.1 மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபையின் அமைப்பு விளக்கப்படத்தை சித்தரிக்கிறது. 2007 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கழிவு பொருட்கள் முகாமைத்துவ நியதிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் பண்ணிப்பளர் முகாமைத்துவ சபையினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு இணங்க நியதிச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்புள்ள பிரதான நிறைவேற்று அதிகாரி ஆவர். கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை பிரதானமாக தொழிநுட்ப, நிதி, நிர்வாக அத்துடன் சட்டம் ஆகிய 4 பிரிவுகள் ஊடாக செயற்படுகின்றது. மிஹிசரு வள முகாமைத்துவ நிலையத்தின் நிர்வாக நடவடிக்கை தொழிநுட்ப பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நாளாந்த செயட்பாடு நடவடிக்கைகளில் பெரும்பாலானவை தொழிநுட்ப விடையங்கள் தொடர்பானபடியால் அவ்வாறான மிஹிசரு வள முகாமைத்துவ நிலையத்தின் நிர்வாகம் பிரதானமாக கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் தொழிநுட்ப பிரிவின் விடயப்பரப்புக்கு உரியதாகும்.

தொழில்நுட்பப் பிரிவு

மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகாரசபையின் அடிப்படை பொறுப்பு, கழிவு முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்ப வழிகாட்டல்களை மேல் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி தாபனங்களுக்கு வழங்குவதே ஆகும். இது முக்கியமாக அதன் தொழில்நுட்பப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்பத் துறையின் செயல்பாடுகள் பிரதி பணிப்பாளரினால் (தொழில்நுட்ப மற்றும் பயிற்சி) மேற்கொள்ளப்படுவதுடன் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் பிரிவின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் தொழில்நுட்ப பயிற்சி உதவி பணிப்பாளரால் கண்காணிக்கப்படுகிறது. மாவட்ட அளவில் கழிவு பொருள் முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் ஆராய்ந்து பார்ப்பது மாவட்ட முகாமையாளர்கள் ஊடாக இடம்பெறுவதுடன் மாவட்ட முகாமையாளர்களின் கீழ் வலய முகாமையாளர்கள் கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த மாவட்ட முகாமையாளர்கள் மற்றும் வலய முகாமையாளர்கள் தலைமை அலுவலக ஊழியர்களின் ஆதரவுடன் பணிபுரியும் கள அலுவலர்களின் குழுவாகும். மிஹிசரு வள முகாமைத்துவ நிலையங்களின் பணியாளர்களைத் தவிர்த்து தொழில்நுட்ப பிரிவில் உள்ள மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 18 ஆகும்

நிர்வாகப் பிரிவு

நிர்வாகப் பிரிவானது அதிகார சபைக்கு ஒரு வசதி வழங்குபவராக செயல்படுகிறது. கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் இலக்குகளை அடைவதில், முக்கியமாக மனித வள முகாமைத்துவ திணைக்களம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதவி பணிப்பாளர் (நிர்வாகம்) தலைமையிலான நிர்வாகப் பிரிவு, மொத்தம் 8 பதவிகளைக் கொண்ட ஒரு நிர்வாக அதிகாரி மற்றும் ஏனைய உதவி பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது

நிதிப் பிரிவு

நிதிப் பிரிவின் செயல்பாடுகளில் வருமான அடிப்படையிலான நிதி பாய்ச்சல் முகாமைத்துவம், சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவம், பொருட்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் மற்றும் நிதி அறிக்கையிடல் ஆகியவை அடங்குகின்றன. கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையானது மாகாண நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் திரைசேரியின் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என்பதால், நிதித்துறையானது நிதி ஒழுக்கத்தை பேணுவதில் முக்கியமான மற்றும் பொறுப்பான பாத்திரத்தை வகிக்கிறது. இது பிரதி பணிப்பாளர் (நிதி) தலைமையின் கீழ் உதவி பணிப்பாளர் (நிதி) மற்றும் ஏனைய உதவி பணியாளர்கள் உட்பட 8 பதவிகளின் பணியாளர்களைக் கொண்டுள்ளது.

சட்டப் பிரிவு

மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபை சீராக இயங்குவதற்கு உதவும் மற்றொரு பிரிவு, சட்டப் பிரிவு ஆகும். கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் ஒரு உதவி பணிப்பாளர் (சட்டம்) மற்றும் ஒரு சட்டத்தரணியின் தலைமையில் இது வழிநடத்தப்படுகின்றது. பாரிய அளவிலான கழிவு பொருட்கள் முகாமைத்துவத் திட்டங்களை நிறைவேற்றுவது உட்பட அனைத்து சட்ட விடயங்களையும் சட்டப் பிரிவு கையாளுகிறது. இதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டு ஆகும்

“மிஹிசரு” வள முகாமைத்துவ மையங்கள்

மிஹிசரு வள முகாமைத்துவ மையங்கள், கொத்தணி அடிப்படையிலான கழிவு முகாமைத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கும், கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பதப்படுத்துவதற்கும் அகற்றுவதற்கும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கு மற்றும் தனியார் துறையினருக்கும் நேரடி சேவைகளை வழங்குவதற்கு நிறுவப்பட்டது. தற்போது, 4 மிஹிசரு வள முகாமைத்துவ நிலையங்கள் கறதியான, போஹொறவத்த, களுத்துறை, ஹோமாகம மற்றும் பெத்தியகந்த ஆகிய இடங்களில் இயங்குகின்றன. மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகார சபையின் தொழில்நுட்பப் பிரிவு தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்குவதுடன் தினசரி செயல்பாடுகள் அந்தந்த செயற்பாட்டு முகாமையாளரால் நிர்வகிக்கப்படுகின்றன. நான்கு மிஹிசரு வள முகாமைத்துவ நிலையங்களின் மொத்த ஊழியர்கள் 70 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். தற்போது செயட்திட்ட பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக உள்வாங்க அதிகாரசபை முன்மொழிந்துள்ளது.

"மிஹிசரு" கள ஆய்வு மற்றும் பயிற்சி மையம்

கள ஆய்வு, பயிற்சி மற்றும் பொதுமக்களிடையே அறிவுறுத்துவதற்காக கழிவு பொருட்கள் முகாமைத்துவ துறையில் நீண்டகால பற்றாக்குறையை பூர்த்தி செய்வதற்காக மேல் மாகாண கழிவு பொருட்கள் முகாமைத்துவ அதிகாரசபை 2022 இல் மிஹிசரு பயிற்சி மற்றும் ஆய்வு நிலையத்தை நிறுவியது. கஸ்பவ, கறதியான பகுதியில் அழகிய சூழலில் கட்டப்பட்டுள்ள விரிவுரை மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்கள், கலந்துரையாடல் மண்டபங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற நவீன வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டடத்தில் இந்த மையம் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி நிலையத்தை நிறுவியதன் அடிப்படை நோக்கம், கழிவு முகாமைத்துவ திட்டங்களில் ஈடுபட ஆர்வமுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்பினருக்கு பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகளை வழங்குவதாகும்.

இந்த நிலையம் மேல் மாகாணத்திற்கு மட்டுமன்றி ஏனைய மாகாணங்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் தனது சேவைகளை வழங்குகிறது. இந்த மையம் மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு டிப்ளமோ சான்றிதழ் பாடநெறிகள், கருத்தரங்குகள், தேசிய தொழில்முறை தகுதிகள், நிகழ்நிலை பயிற்சி, வீடியோ கருத்தரங்குகள், குறுகிய கால பாடநெறிகள் மற்றும் சேவை நிலை பயிற்சி திட்டங்களை நடத்துகிறது.

இந்தப் பயிற்சி மையம், அதன் பங்குதாரர்களுக்கு மேம்படுத்தப்பட்ட மற்றும் தரமான சேவைகளை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.